பஜனைக்கோவில் வரலாறு

முன்னோர்களால் பல ஆண்டுகளுக்கு முன் சுமார் தோராயமாக 150 ஆண்டுகளுக்கு முன்பு புனித அந்தோணியார் பஜனைக்கோவில் தொடங்கப்பட்டு தொடர்ந்து வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆண்டின் அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் மாலையில் பஜனைக்கோவிலில் பஜனை குழு கூடி இறைவழிபாடு செய்தல் மற்றும் பஜனை பாடல்கள் பாடியபடி  புனித அந்தோணியார் திருவுருவப்படம் ஏந்தி ஊரை சுற்றி வலம் வந்து பஜனை எடுத்தல் இன்றளவும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


மடத்து தெருவிலும் குளத்து மேட்டுத்தெருவிலும் இயங்கி வந்த சிற்றாலயம் ஏட்டு என்கிற திரு A.வேதநாயகம் அவர்களின் முயற்சியால் அவரது பெயரிலேயே 1945 ம் வருடம் ஆகஸ்டு மாதம் தற்பொழுது பஜனைக்கோவில் இருக்கும் இடம் 1½ சென்ட் இடம் புளிச்சக்கள், அப்பாய் குடும்பத்தாரால் தானமாக வழங்கப்பட்டு நிலையான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
பல ஆண்டுகள் மண்சுவர் கூரை கட்டிடமாகவும், பின்னர் ஓட்டு கட்டிடமாகவும் இயங்கி வந்த ஆலயம் திரு D.பெரியநாயகசாமி அவர்களின் பேருதவியால் 23.02.1993 ல் மெத்தை கட்டிடமாக கோவில் புதுப்பிக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது.


பஜனைக்கென்று பல பாடல்கள் முன்னோர்களால் சொந்தமாக இயற்றப்பட்டு ஜெப, பாடல் வழிபாடுகள் நடைபெறுகிறது. பாடல்கள் கோலாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளது மேலும் பாடல்களுக்கான சிறப்பு. முன்னோர்களின் பாடல்களை அடுத்த தலைமுறைக்கு வழங்கியதில் திரு அபிரகாம் அவர்களின் பங்களிப்பும் அடுத்து மத்திய காலத்தில் திரு D.குழந்தைசாமி ஆசிரியர் அவர்களின் பங்களிப்பு மிக சிறப்பு வாய்ந்தது. தற்காலத்தில் திரு மந்திரி (எ) S.ராயப்பன் ஆசிரியர், சேட்டு (எ) J.குழந்தை டேவிட் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களுடன் சிறப்பாக பாடப்பட்டு வருகின்றன.




பல காலம் முதல், ஒவ்வொரு வருடமும் புனித அந்தோணியார் சிறப்பு தேர்பவனியும், பெரிய ஏரியில் இறை வழிபாடும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. திரு K.சின்ராஜ் அவர்களின் பெரும் முயற்சியால் திருவிழா தேதியானது ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இரண்டாம் திங்கள் கிழமை பெரிய ஏரியில் இறைவழிபாடும் அதனை தொடர்ந்து செவ்வாய் கிழமை மாலை பஜனைக்கோவிலிலேயே  திருப்பலியும் இரவு ஆடம்பர தேர்பவனி என்பதையும் நிலையாக கொண்டு இன்றளவும் நடைபெற்று வருகிறது.




பெரிய ஏரியில் அன்னதான வழிபாட்டின்பொழுது காட்டின் மத்தியப்பகுதியில் உள்ள ஆடு மேய்த்தவர்களுக்கு புனித அந்தோணியார் காட்சியளித்ததாக கூறப்படும் இடத்திற்கு பஜனை குழுவினர் சென்று ஜெப வழிபாடு செய்து வந்த பின்னரே அன்னதான நிகழ்வு நடைபெறும் என்பது மரபு.
காலம் காலம் தொட்டு இன்றளவும் எள்ளளவும் குறையாத ஊர் மற்றும் சமூக  ஒற்றுமையுடன் உபயதாரர்களின் மனமுவந்த பேருதவியாலும் உறவுகளின் கடின உழைப்பாலும் கோவில் செப்பனிடுதல், தேர்பவனி நடத்துதல், அன்னதானம் வழங்குதல் போன்றவை இன்றளவும் தொய்வில்லாமல் நடந்து வருகிறது.




சமூக ஒற்றுமைக்காக ஆரம்பிக்கப்பட்ட இப் புனித அந்தோணியார் பஜனைக்கோவிலினை அங்கமாக கொண்ட ஒவ்வொரு குடும்ப நபருக்கும் நன்றி பாராட்டப்படுகிறது. இதுவரை கோவிலின் அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று சிறப்புடன் நடத்திய அனைத்து  முன்னாள் தலைவர்கள் செயலாளர்கள் பொருளாளர்கள் மேனேஜர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு  பஜனைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி

பஜனைக்கோவில் மின் இணைப்பு விபரம்

மின் இணைப்பு உள்ளவர் பெயர்:- சிந்தாமணி



மின் இணைப்பு எண்:- 02-521-012-94

மாதிரி இரசீது

பஜனைக்கோவில் பத்திரம்




நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே

நீ எந்தன் பாறை என் அரணான யேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே-2
ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ

உன் புகழைப் பாடுவது

உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்;வின் செல்வமையா    

நன்றியால் துதி பாடு

நன்றியால் துதி பாடு - நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தயில் உண்மை உள்ளவர்

மாசில்லா கன்னியே மாதாவே

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்
நேசமில்லாதவர் நீசரேயாவார்
வாழ்க வாழ்க வாழ்க மரியே

சந்தோஷம் பொங்குதே

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே - அல்லேலூயா

அன்னைக்கு கரம் குவிப்போம்

அன்னைக்கு கரம் குவிப்போம்
அன்னைக்கு கரம் குவிப்போம் - அவள்
அன்பை பாடிடுவோம் - அவள் அன்பை பாடிடுவோம்

இயேசுவின் இருதயமே

இயேசுவின் இருதயமே
என்றும் இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால்
எங்கள் ஆனந்தம் நிலை பெறுமே

ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் -

தூய அந்தோணியாரை நோக்கி செபம்

கற்பில் உத்தமமான லீலி மலராகவும் ஊற்றுமாகவும் இருக்கும் தூய அந்தோணியாரே, எளிமைத் தனத்தின் ஆபரணமே, உபவாசத்தின் கண்ணாடியே,

Christmas 2019

திருக்கோவிலூர் பங்கில் கிறிஸ்துமஸ் விழா 2019 இரவு.

கல்லறைத்தோட்டம்

2019





பெண் பாடகர் குழு

2019 ஆம் ஆண்டு புனித அந்தோணியார் தேர்பவனியின் பொழுது பெண் பாடகர் குழு.

நெடுங்கம்பட்டு பங்கு தந்தை

நெடுங்கம்பட்டு பங்குத்தந்தை அருட்பணி  ஆரோக்கியதாஸ் அவர்கள்

திருக்கோவிலூர் பங்கு கோவிலின் முகப்பு தோற்றம்


புதிய கெபி


நெடுங்கம்பட்டு பழைய பங்கு கோவில்


நெ.பட்டு கோவிலின் பக்கவாட்டுத்தோற்றம்


நெடுங்கம்பட்டு பங்கு கோவில்


நெடுங்கம்பட்டு கோவிலின் விழா மேடை


பங்கு கோவில் திறப்பு கல்வெட்டு


our village N Pet


பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு



பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு:


·                  பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.
·                  தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும்.

அர்ச்சிஷ்ட சிலுவை மந்திரம்



                  
அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே


நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே 

ஆணி கொண்ட உன் காயங்களை


ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் - 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே - 2
ஆயனே என்னை மன்னியும் - 2

தலைவா உனை வணங்க


தலைவா உனை வணங்க - என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க - நான்
சிரமே தாள் பணிந்தேன்

மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்


மதுமலர் நிறைகொடி கையிலேந்தும்
மாட்சிமை நிறைசூசை மாமுனியே
துதிவளர் உமது நற்பதம் வந்தோம்
துணை செய்து எமையாளும் தாதையரே

ஞானம் நிறை கன்னிகையே


ஞானம் நிறை கன்னிகையே
நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

ஆரோக்கிய மாதாவே உமது புகழ்


ஆரோக்கிய மாதாவே உமது புகழ்
பாடித் துதித்திடுவோம் -எந்நாளும்
பாடித் துதித்திடுவோம்  (2)

சுமை சுமந்து சோர்ந்திருப்போரே


சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
வாருங்கள் நம் ஆண்டவர் அழைக்கின்றார்
இளைப்பாற்றி கொடுக்கின்றார்

அமைதி தேடி அலையும் நெஞ்சமே


அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரின்றி வேறில்லையே

நீ செய்த நன்மை நினைக்கின்றேன்


நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்
நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன்
இறைவா இறைவா இறைவா இறைவா

உம் சிறகுகள் நிழலில்


உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
அரவணைத்திடு இறைவா !
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் - 2

யாரிடம் செல்வோம் இறைவா


யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா    (4)

நன்றியால் துதிபாடு


நன்றியால் துதிபாடு – நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர் – நன்றி

பிரியமானவனே உன் ஆத்துமா


பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் -நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)

குதூகலம் கொண்டாட்டமே


குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்திலே
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

இயேசு கூட வருவார்


இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா – 2
1.
நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்