சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் என்னில் பொங்குதே
வழிதப்பி நான் திரிந்தேன் - பாவ
பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக்குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே
சாத்தானும் சோதித்திட - தேவன்
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே