அன்னைக்கு கரம் குவிப்போம்

அன்னைக்கு கரம் குவிப்போம்
அன்னைக்கு கரம் குவிப்போம் - அவள்
அன்பை பாடிடுவோம் - அவள் அன்பை பாடிடுவோம்

கன்னிமையில் இறைவன் உருகொடுத்தார்
அந்த முன்னவனின் அன்னை எனத் திகழ்ந்தாள்
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தாள்
தினம் அவள் புகளினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருள் இழந்தான்
அன்று பாசமதால் அன்னை கருணை கொண்டாள்
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார்
பாவினில் அவள் புகழ் பாடிடுவோம்