ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் -

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே  ( ஒரு தாய் ...)

கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்  ( ஒரு தாய்..)

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே  ( ஒரு தாய் ...)

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்  ( ஒரு தாய் ...)