பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு



பரிசுத்த ஆவிக்கு மன்றாட்டு:


·                  பரிசுத்த ஆவியே தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும்.
·                  தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும்.
·                  உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே, வெயிலின் குளிர்ச்சியே, அழுகையின் தேற்றரவே எழுந்தருளி வாரும்.
·                  வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும்.
·                  உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
·                  அசுத்தமாயிருக்கிரதைச் சுத்தம் பண்ணும்.
·                  உலர்ந்ததை நனையும்.
·                  நோவாயிருக்கிரதைக் குணமாக்கும்.
·                  வணங்காதை வணங்கப் பண்ணும்.
·                  குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும்.
·                  தவறினதை செம்மையாய் நடத்தும்.
·                  உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும்.
·                  புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்த சந்தோசத்தையும் எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.



சர்வேசுவரா எங்களுக்கு உதவியாயிரும். கர்த்தாவே எங்களுக்கு ஒத்தாசை செய்தருளும். பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியில் இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்.