அருள்புரிவாயே அந்தோணிநாதா...

 அருள்நிறை வேந்தே   அற்புத தேவா அருள் புரிவாயே

ஆயன் உன்னடி   அண்டியே வந்தோம் அருள் புரிவாயே

இச்சைகள் நீங்கி   இகத்தினில் வாழ…. அருள் புரிவாயே

ஈசனும்பாதம்  ஈடேற்ற வந்தோம் அருள் புரிவாயே

உம் வழி பற்றி   உலகினில் வாழ அருள் புரிவாயே

ஊழ்வினை நீங்கி  உம்அடி சேர அருள் புரிவாயே

எங்கள் காவலாம்  எம்இறை நேசா அருள் புரிவாயே

ஏக யேசுவை  ஏந்தியே வந்தீர் அருள் புரிவாயே

ஐய உலகில்  மெய்பொருள் காண ... அருள் புரிவாயே

ஒன்றாய் உலகில்  ஒற்றுமை ஓங்க... அருள் புரிவாயே

ஓங்கியே உம் பெயர்   ஓதியே வந்தோம்... அருள் புரிவாயே

ஔடதம் இல்லா   நிறைவாழ்வு  வாழ... அருள் புரிவாயே


அஃதே ஓர் வழி   உம்பாதம் வந்தோம்... அருள் புரிவாயே

தொடர்புக்கு

 

பஜனை கோவில் தலைவர்:-      D. பெரியநாயகசாமி

   கை பேசி எண்:-                                76394 25533
------------------------------------------------------------------------
பஜனை கோவில் செயலாளர்:-   M. கிங் 

 
கை பேசி எண்:- 99760 26832

-------------------------------------------------------------------


பஜனை நிர்வாகி :- தம்பி ( எ)  R. சவரிமுத்து 
கை பேசி எண்:-          76397 25935   

------------------------------------------------------------------------

   

கூகுல் மேப் லிங்க்.


முகநூல் பக்கம்

 

சுருக்கமான சிலுவைப்பாதை


சுருக்கமான  சிலுவைப்பாதை

பீடத்துக்கு முன்பாக:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர்! அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

கல்வாரி மலைமேலே

கல்வாரி மலைமேலே
கள்வர்களின் நடுவினிலே
கனிவுள்ள முகம் பார்த்தேன்
அது கர்த்தரின் முகமன்றோ
அது கடவுளின் முகமன்றோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால்
இயேசுவின் அன்பை

நான் பாவி இயேசுவே

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன் 
என்னைத் தேற்றும் இயேசுவே -2

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்

மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே

வியாகுல மாமரியே

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ (2)

புனித அந்தோணியார் வாழ்க்கை வரலாறு




பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.

மாதாவே சரணம்

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி

நன்றி

இத்தளத்திற்கு வருகை புரிந்தமைக்கு மிக்க நன்றிகள் பல. தங்களின் மேலான ஆலோசனைகளை அளிக்கவும்.

புனித அந்தோணியார் முன் சொல்லும் ஜெபம்

புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரேதூய்மை துலங்கும் லீலியேவிலைமதிக்கப்படாத மாணிக்கமேவிண்ணுலக மண்ணுலக காவலரே!

புனித அந்தோணியார் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

காணாமல் போன பொருளை கண்டடைவதற்கு ஜெபம்

 மகா உன்னத மகத்துவம் பொருந்திய அர்ச்சிஸ்ட அந்தோனியாரேசகல நன்மைகளும் நிறையப்பெற்ற அப்போஸ்தலரேதேவரீர் (காணாமற்போன பொருளைத் திரும்பக் கண்டடையத் செய்கிறபுதுமைகளைச் செய்யும் வரத்தை ஆண்டவரிடமாக அடைந்திருக்கிறீரே (காணாமல் போன பொருளைத் திரும்பக் கண்டடையும்படிஉமது ஆதரவைத் தேடி வந்திருக்கிற அடியேனுக்கு இத்தருணத்தில் உதவி புரிந்தருளும்தேவரீரைக் கொண்டு இத்தகைய மேலான அதிசயங்களைச் செய்விக்கிற ஆண்டவரை நான் மேன்மேலும் மகிமைப்படுத்திக் கொண்டாடி வருகிறேன். -ஆமென்.

புனித அந்தோணியாரை நோக்கி அனுகூலமடைய ஜெபம்

 ! பரிசுத்தத்தின் வெண்மையான லீலி புஷ்பமே ! உன்னதத் தரித்திரத்தின் முன் மாதிரிகையே மெய்யான தாழ்ச்சியன் கண்ணாடியேபரிசத்தத்தின் ஒளிவிடும் நட்சத்திரமே ! மகிமையிலங்கும் புனித அந்தோனியாரே ! உமது திருக்கரங்களில் பாலனாக இயேசு எழுந்தருளி வரம் விNஷித்த சுதந்தரம் பெற்று அகமகிழ்தீரல்லோ !

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரேஇறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரேதிருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரேஇறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரேதுன்புறுவோரின் துயர் துடைப்பவரேபாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.