கல்வாரி மலைமேலே
கள்வர்களின் நடுவினிலே
கனிவுள்ள முகம் பார்த்தேன்
அது கர்த்தரின் முகமன்றோ
அது கடவுளின் முகமன்றோகள்வர்களின் நடுவினிலே
கனிவுள்ள முகம் பார்த்தேன்
அது கர்த்தரின் முகமன்றோ
தேகமெல்லாம் இரத்தமயம்
திணறுகின்றார் மூச்சுவிட -2
தாகம் தாகம் என்கின்றார்
தண்ணீர் கொடுக்க யாருமில்லை
அழுவதற்கோ ஆட்களில்லை
அணைத்துச்செல்ல கரங்களில்லை -2
அப்பா தந்தாய் என்கின்றார்
ஐயோ பாவம் தேவமைந்தன்