அருள்நிறை வேந்தே அற்புத தேவா… அருள் புரிவாயே…
ஆயன்
உன்னடி அண்டியே வந்தோம் …
அருள் புரிவாயே…
இச்சைகள்
நீங்கி இகத்தினில் வாழ…. அருள் புரிவாயே…
ஈசனும்பாதம்
ஈடேற்ற வந்தோம்… அருள் புரிவாயே…
உம்
வழி பற்றி உலகினில் வாழ…
அருள் புரிவாயே…
ஊழ்வினை
நீங்கி உம்அடி சேர… அருள் புரிவாயே…
எங்கள்
காவலாம் எம்இறை நேசா… அருள் புரிவாயே…
ஏக
யேசுவை ஏந்தியே வந்தீர்… அருள் புரிவாயே…
ஐய
உலகில் மெய்பொருள் காண ... அருள் புரிவாயே…
ஒன்றாய்
உலகில் ஒற்றுமை ஓங்க... அருள் புரிவாயே…
ஓங்கியே
உம் பெயர் ஓதியே வந்தோம்... அருள் புரிவாயே…
ஔடதம்
இல்லா நிறைவாழ்வு வாழ... அருள் புரிவாயே…