தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரேஇறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரேதிருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரேஇறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரேதுன்புறுவோரின் துயர் துடைப்பவரேபாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.
புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையேநம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும்உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்துன்பம்பிணிவறுமைசிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும்அழுவோரின் கண்;ணீரைத் துடைத்தருளும்நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.
எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரேஇறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும்நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போலநாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும்செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும்திருச்சபை தளைக்கவும்நாடு செழிக்கவும்நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும்மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்துதக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்.
எங்களையும் எங்கள் குடும்பங்களையும்எங்கள் தொழில் முயற்சிகளையும்உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும்எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம். - ஆமென்.