புனித அந்தோணியார் முன் சொல்லும் ஜெபம்

புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரேதூய்மை துலங்கும் லீலியேவிலைமதிக்கப்படாத மாணிக்கமேவிண்ணுலக மண்ணுலக காவலரே!

கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரேபாவிகளின் தஞ்சமேஉமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம்உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரேசூரத்தனமுள்ள மேய்ப்பரேபசாசுகளை மிரட்டி ஓட்டுபவரேதிருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரேஉலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!
எங்கள் தஞ்சம் நீரல்லவோஎங்கள் மகிழ்ச்சியும்நம்பிக்கையும்பாக்கியமும் நீரல்லவோநீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும்பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோஉம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும்அழுகிறவர்களை அரவணையும்அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும்பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமேதயைக்கடலேதவிப்பவர்களுக்குத் தடாகமேதனித்தவர்க்கு தஞ்சமேஉமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம்துன்பம்பிணிவறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோஎங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோஎங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோஎங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோஅப்படி ஆகுமோஐயா எங்களின் அன்பான தகப்பனேஎங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும்.

ஆமென்.