தஞ்சம் நீயே தஞ்சம்
நீயே
ஜெபமாலை மரியன்னை
நீயே
(1)
ஞானம் நிறைந்த ஜோதி நீயே
நலமருள்வாயே நலமருள்வாயே
நல்லோர் போற்றும் ராக்கிணியே எம்மை காப்பாயே
(2)
கற்பு என்னும் ஆடை அணிந்த
கன்னி மாதாவே கன்னி மாதாவே
பொற்புடைய யேசு பாலன் தன்னை ஈன்றாயே
(3)
தூய வெண்மை லீலிமலரே
துணைசெய்தருள்வாயே துணைசெய்தருள்வாயே
மாய அலகை தன்னை வென்ற மேரி மாதாவே
(4)
வானோர் தொழும் ராக்கிணியே
வரமருள்வாயே வரமருள்வாயே
ஈனமாந்தர் எம்மை மீட்க வரம் தரும் தாயே