தவத்தினில் சிறந்த மாமுனியே - எங்கள்
தந்தை அந்தோணி மாமுனியே
பாவத்தினை வெறுத்த குணவானே - எம்மை
(1)
எண்ணறியாத புதுமை செய்தீர் இந்த
அவனிவாழ் மாந்தர் திருந்திடவே
என்றுமே யாவும் உம்மை பின் சென்று
வாழ்ந்திட அருள் வரம் தந்திடுவாய்
(2)
கற்புடை வாழ்க்கை வாழ்ந்துமே நீர் - ஒரு
கன்னியமான துறவு பெற்றாய்
அற்ப உலகில் பற்றதை நீக்கி
அவனியில் சிறந்த நல் துறவு பெற்றாய்