தாயே உன் பாதம் தேடினோம்…



தாயே உன் பாதம் தேடினோம்
தயவுடனே உன் அருளை நாடினோம்
எங்கள் குறையை நீக்கி
உயர்கதியில் சேர்க்க
நலமாக வாழ்ந்திட அருள் புரிகுவாய்

பாவமென்னும் சேற்றில் விழுந்த பாவிகள்
பெறும் பாதகம் பல புரிந்த பாதகர்
தீய அலகை தன்னை வென்ற மாமரி அந்த
திருச்சுதனை ஈன்றெடுத்த தாய்மரி