திருப்பரன் துணைத் தரலாகாதா…


                  

திருப்பரன் துணைத் தரலாகாதா
பதுவை நாதனே
திருப்பரன் துணைத் தரலாகாதா
(1)
மருளலகையை வென்ற சீமோனே
மாபெரும் நலன்கள் செய்தோனே
வாதினை வென்ற சோதில்லா முனியே
வந்தெம்மை ஆளும் நீயே
( 2 )
தவமதில் சிறந்த தாதையே காராய்
தாசர்கள் எம்மைக் கண்பாராய்
பாவிகள் யாமும்மை தேடியே வந்தோம்
பாதுகாத்தருள் குணவானே
(3)
மீனுபதேசா  ஞானப்பிரகாசா
மேதினியோர் புகழ்நேசா
மேன்மையாய் யாமும்மை தேடியே வந்தோம்
மாபெரும் நலம் அருள்வாயே