அம்மா
அம்மா வேளாங்கண்ணி அம்மா
அவனி மக்கள் அனைவருக்கும் ஆதாரம் நீயம்மா
(1)
கூன்
முடமான எங்கள் குறைகள் தீரும் அம்மா
குற்றங்களை
நீக்கி எம்மை ஆள வேண்டும் அம்மா
வான்புகழை
தாங்கியே நீ கன்னியாக வாழும்
வண்ணமேனியோடு
அன்பு வடிவம் கொண்ட அம்மா
(2)
சமரசத்தின்
தாயகமும் தற்பொருளும் நீ தானே
சன்மார்க்க
ஞானமிகு சாதகமும் நீ தானே
சத்தியமும்
நீதானே நித்தியமும் நீ தானே
இவ்வுலகில்
நான் காணும் அற்புதமும் நீ தானே