உலகம் காத்த யேசு ராஜா…

உலகம் காத்த யேசு ராஜா
உன்னை நான் மறவேனே

நலமே சிறக்க நாதனே பாரில்
நாளும் துன்பம் மிகவே கொண்டீரே

நிலமே செழிக்க ஆவி துறந்தீர்
நினைக்கையில் இது துயரே

பரிந்தென்னை ஆள வாருமிப்போதே’
பாதம் பணிந்தேனே

மரித்தவர் உலகில் வருவதுமில்லை
மகிபால உயிர்தெழுந்தீரே