அருள் நிறை கன்னிகையே அமலனின் தாய்மரியே…

அருள் நிறை கன்னிகையே அமலனின் தாய்மரியே
ஆதரித்தருள் புரியே
கதியென உனை வந்துமே சேர்ந்தோம்
கருணை பொழி அமலியும் நீயே

ஜெயமே ஜெயமிகு மணியே
கனியே கனியின்ப ரசமே
உனையே தினம் பணிவோமே
எமையே நினைந்தருள்வாயே
எம்மையாள் கன்னி மரியே
(1)
பார் புகழ் கன்னி நீயே    பாத்திமா அன்னை நீயே
பாதுகாத்தருள் புரியே
விளங்கும் வேளாங்கன்னி    ஆரோக்கிய மாமரியே
(ஜெயமே ஜெயமிகு மணியே….)
(2)
அமல உற்பவி நீயே    விமலவிண்மலர் நீயே
அன்பு நிறைந்த மரியே
கமலப்பாதம் பணிந்தோம் கதியெமை சேர்ப்பாய் நீயே
( ஜெயமே ஜெயமிகு மணியே…. )