அந்தோணி நாதா ஓ அந்தோணி நாதா…

அந்தோணி நாதா ஓ அந்தோணி நாதா
உம்மை என்றுமே துதித்து வாழ்த்தி போற்றுகிறோம்
ஓ அந்தோணி நாதா
(1)
காணாப் பொருளை கண்டு
அடையச்செய்தவரே - தேவா
காணா மாட்சியை அளித்து
எம்மை காத்தருளும்
(2)
பேய்களை நடுங்கச்செய்த
உம் திரு அருளாலே – தேவா
பாவிகள் எம்மையும் காத்து
பரகதி சேர்த்தருளும்
(3)
சேசுவை கையில் ஏந்தி
ஆசீர் பொழிந்தவரே – தேவா
எம்மை உம் திருவடி சேர்த்து
ஆசீர் பொழிந்தருளும்