அந்தோணி முனியே…

அந்தோணி முனியே
அன்பர்க்கு அருள் புரிவாய்
அந்தோனி முனியே
(1)
செந்தா மலர் பாதத்தை
சிறுவர்கள் நாடி வந்தோம்
செய்த பாவத்தைப்போக்க
சேவித்து இங்கு வந்தோம்
சேசுவை வேண்டி எம்மை காரும் – நாங்கள்
செய்தா பாவங்களை தீரும்
சிறுவர் பாடினோம் கருணை தந்திட
வருவாய் இத்தினம்
(2)
பஞ்சப்பிணியால் நாங்கள்
பாவிகள் வாடுகிறோம்
பாரா முகம் ஏனோ
பக்தரே அந்தோணியே
பட்சம் வைத்து எங்களை நீர் காரும் – இந்த
பாருலகில் நல்மழையை தாரும்
சிறுவர் கூடினோம் கருணை தந்திட
வருவாய் இத்தினம்