அம்மாவும்
நீயே அப்பாவும் நீயே
(1)
பல்லுயிர்க்கும்
உயிரளிக்கும் பரமன் நீயல்லோ
பல எண்ணில்லாத
பொருளனைத்தும் படைப்போன் நீயல்லோ
அன்புடனே
பாதம் அதை அண்டியே வந்தோம் – உன்
அமலத்திரு
பாதமதில் சேர்ப்பாய் எம்மையே
(2)
எண்ணறியா
நலமனைத்தும் படைப்போன் நீயல்லோ
எங்கள்
யேசுவே உன் பெருமைதனை எண்ணலாகுமோ
முப்பொழுதும்
நிறைந்தவனே முற்றுணர்வோனே – எங்கள்
தற்பரனே
தயவுடனே காரும் எம்மையே
(3)
எங்கும்
நிறை பொருளாக இருப்போன் நீயல்லோ – காணும்
எவ்வுயிர்க்கும்
வாழ்வளிக்கும் ஈசன் நீயல்லோ
நீயல்லாது
யார் துணையோ பூவில் யாவர்க்கும் – உம்
குளிர்
நிழலை தந்தெம்மையே ஆள்வாய் நிதமே