அந்தோணிநாதனை நாம் தேடுவோம் - 2
அவர் திருவடி புகழ்பாடுவோம்
(1)
சொந்தமாய் நாம் கூடுவோம்
ஸ்துதி பாடுவோம்
வந்தனங்கள் கூறி வாழ்த்திடுவோம்
(2)
மாய அலகை வென்றாய் வனமே சென்றாய்
நேயனே பாரில் தவத்தை கொண்டாய்
(3)
சேசெனும் பாலகனை கரமேந்தினாய்
சேயர்கள் உம்மையே போற்றி வந்தோம்