விளங்கும் செம்பொன்…




விளங்கும் செம்பொன்
ஆலயம் கொண்டு
வேளாங்கன்னி நகர் வாழ்
ஆரோக்கிய தெய்வமணியே
சுகிர்த்த ஜெப ஐம்பத்து மூன்று மணியே
(1)
கபிரியேல் என்னும் சம்மனசானவர்
கண்டு மங்களம் சொன்ன
காட்சிக்குகந்த மணியே கன்னிமரி
அற்புத மறையின் மணியே
(2)
நிர்மல கர்த்தர் மானிடராக
வந்தாரென வயிற்றில்
ஆனந்தம் கொண்ட மணியே
அன்னைமரி சத்திய மறையின் மணியே
(3)
முப்பொருளாகிய
முத்தொழிலோனை
மூன்றுநாள் காணாமலே
ஏங்கி தவித்த மணியே
கோவிலில் கண்டு
ஆனந்தம் கொண்ட மணியே
(4)
துலங்கும் வெண்மதி புதுமுகம் கொண்டு
சூரியன் ஆடைப்பூண்ட
சுந்தர தாயே போற்றி
உனது பாதம் வந்தேன் மலர்கள் சாற்றி