வாருங்களே எழுந்து வாழ்த்துவோம் நாம்கூடி -2
1
ஆறு லட்சணமுடைய ஆதிபரன் பாரீர் -2
ஆயர்கள் அடிபணிய அருள்புரிந்தார் நேரில்
2
தந்தையாம் பதித்துரை சாமிக்கவி பாடி -2
சந்தோஷம் கொண்டாடிடுவோம் தற்பரனை நாடி
3
வேதம் முனைந்த பெரியோர்களை கொண்டாட-2
வீணைத் தம்புரோடு வந்தோம் விமலனைக்
கொண்டாட
4
உலகின் பாவமொழிக்க ஓர் துணைவராக -2
உத்தா பெத்லேம் நகரில் உதித்தார்
மகிழ்வாக
5
பாடுங்கள் ஆனந்தமாய் பாடியே நின்றாடி -2
பக்திசெய்வோம் இத்தரையில் யேசுவை மன்றாடி