வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்…



வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்

தங்கத் தமிழ்நாட்டில் வேளை நகர் தன்னில்
தாயாக வந்த எங்கள் ஆரோக்கிய மாதாவே
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்
(1)
எங்கெங்கும் உன் புகழ் திருகீதமே மக்கள்
இதயம் கசிந்து கண்ணீர் கதை கூறுமே
எங்கெங்கும் உன் புகழ் திருகீதமே மக்கள்
இதயம் கசிந்து கண்ணீர் கதை கூறுமே
மங்கள பண்பாடும் எந்தன் நெஞ்சம்
மங்கள பண்பாடும் எந்தன் நெஞ்சம்
திகழ்பிறை சூடும் உந்தன் திருப்பாதமே
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்
(2)
பல கோடி மக்களுக்குப் பார்வை தந்தாய்
நடமாடும் முடவர்க்கும் அருள் புரிந்தாய்
பல கோடி மக்களுக்குப் பார்வை தந்தாய்
நடமாடும் முடவர்க்கும் அருள் புரிந்தாய்
நலம் காண ஊமையைப் பேச வைத்தாய்
நலம் காண ஊமையைப் பேச வைத்தாய்
மரக்கலம் போலத் தவித்தோரை வாழவைத்தாய்
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்

(3)
காணிக்கைப் பொருள் கோடி காவியம் கூறும்
கழல் பணிந்தோர்கு பசி நோயெல்லாம் தீரும்
காணிக்கைப் பொருள் கோடி காவியம் கூறும்
கழல் பணிந்தோர்கு பசி நோயெல்லாம் தீரும்
மாணிக்க மேடை உந்தன் திருக்கோவில்
மாணிக்க மேடை உந்தன் திருக்கோவில்
மலர்ப்பதம் பாராமல் தீராதென் ஆவல்
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்
தங்கத் தமிழ்நாட்டில் வேளை நகர் தன்னில்
தாயாக வந்த எங்கள் ஆரோக்கிய மாதாவே
வங்கக் கடலில் ஒரு முத்தெடுத்தேன்
வானவர் தாய் என நான் அடுத்தேன்