சேசுவின் மதுர திரு இருதயமே…

சேசுவின் மதுர திரு இருதயமே
சினேக அக்னி மயமே
தினமும் நீர் எங்கள்
சினேகமாய் இருப்பீர்
தேவதயா நிதியே . . .

மனிதரை மோட்ச கதியிலே சேர்க்க
மனுமகனாய் பிறந்தாய்
மகிமைப்பிரதாப கடவுளானாலும்
மாபழிமேற்சுமந்தாய்

உன் திரு ரத்தம் ஒரு துளி முதலாய்
உனக்கென வையாயே
ஓய்வில்லா அன்பால் உன்னையே மறந்தாய்
ஓ திரு இருதயமே

என்னும் எம்மோடு இருந்தருள் ஈவாய்
இனிய நல் உணவானாய்
இவையெல்லாம் பாரா ஈனர்கள் நாங்கள்
இகழ்ந்தும்மைப் பழித்தோமே

கொடுமை செய்யூதர்
கடும் சிலுவைதனில்
அறைந்திட உயிர்துறந்தீர்
மடமை செய் மனிதர்
பயமன்றோ உம்மை
பலியிட ஆனதையா