செந்தோம் நகரில் செந்தோம் நகரில்…

செந்தோம் நகரில் செந்தோம் நகரில்
சீருடன் வாழ்ந்திட்ட
அந்தோணி மாமுனியே
(1)
சேசெனும் பாலனை செங்கரமேந்திடும்
சீர்பெறு மாதவனே
சேயர்கள் எங்களை சேசுவின் பாதத்தில்
சேர்த்திடும் அருந்தவனே
(2)
இப்புவி உயிர்கள் என்றுமே ஈடேற
இதோ உம்மைத் தேடி வந்தோம்
இகத்தில் துயரை தீர்த்திடுவாயே
இமையென காப்பாயே
(3)
கடுந்தவமேற்று கற்பினை காத்து
துறவறம் பூண்டாயே
நல்லுரை செய்த நா இன்னும் அழியா
நல் அற்புதரே வாழி
(4)
கல்லும் கரைந்திடும் உன்சொல்லைக்கேட்டு
கரைந்தன மனங்களுமே
கடவுளின் மக்களாய் திருந்திட்டார் உந்தன்
வாய் சொற்கள் கேட்டதனால்