மங்கையாள் மாமரி ஈன்ற நற்புதல்வா
மாமலர் சூடியுன் பாதமே பணிந்தோம்
சுந்தர திருநாதா ஓ சுந்தர திருநாதா
விருதானச் சுதா வந்தருள் தாதா
1
அன்பும் பண்பும் நிறை தந்தை தாயும் நீயே
சொந்த மாந்தர் எம்மையே
சேர்ந்தெம்மை தாங்கிட தூயனே வருவாய்
சேவடிதன்னில்
வீழ்ந்தோம் அய்யா
2
ஆதம் வினைதனை நீக்க புவிதனில்
அற்புதமாய் வந்தவா
சோதனையால் மனம் ஏங்கி வந்தோமையா
சோர்வில் நின்றெமையே காத்திட நீ வருவாய்
3
நாடு பல சுத்தி நல்லுபதேசங்கள்
நாளும் புரிந்தவரே
வீடுமே சேர்ந்திட நல்வழி காட்டுவாய்
வீனருக்காய் உடல் நொந்திட வந்தாய்