கருணை செய்வாய் எம்தாயே துணை நீயே
கதியுணையன்றி ஓர் துணையில்லையே
(1)
வாணுலகேணி வார்த்தையின் பூமி
வானவர் போற்றிடும் சுந்தரி நீ
ஞான வரம் தரும் தீனதயாளினி
வாழ வரம் தருவாயே மரி நீயே
(2)
அகிலத்தில் பலவே தீதுகள் புரிந்தோம்
அலகையின் அடிமையாய் வாழ்ந்து வந்தோம்
கலகம் செய் அலகையை வென்ற எம்அன்னையே
காத்திடுவாய் எங்கள் தாயே அன்னை நீயே
(3)
மண்ணோரின் தாய் நீ விண்ணோரின் அரசி
உத்தரிப்போர்க்கருள் புரிந்தவளே
என்றுமே உந்தன் புகழினைப்பாட
எளிய மக்கள் உமைத்தேடி வந்தோம்