ஓ சூசை மா முனியே
காத்தருள் புரியே
தேற்றிட வருவாயே
பரை சாற்றியே உன் புகழ்
போற்றிட வந்தோம்
(1)
அன்னை மாமரியின் மணாளா உனை
அண்டி வந்தோர்க்கணு கூலா
உன் பொன்னடி சேர்ந்திட
நல்லாசிப் பெற்றிட
நாடியே வந்தோமையா
நாங்கள் நன்மரணம் அடைய
நற்கதி சேர்ந்திட
நல்வரம் தருவீர் ஐயா
2
யேசுவை வளர்த்திட்ட தந்தாய்
கன்னிமாமரி தாயினை காத்தாய்
உலகிலே சிறந்த விரதமே கொண்டு
கற்பு நெறி மாறா முனியே
உம் தூய வழியினிலே
பின்சென்று உம்மையே
நாடி வந்தோம் தந்தையே