பாடி துதி மனமே...




பாடி துதி மனமே
பரனை கொண்டாடித்துதி தினமே தினமே
1
ஓடித்தொழு நெஞ்சமே
உலகையாள் சேசுவின் பாதம் நிதமே நிதமே
2
ஆடிக்களி மனமே
அமலனின் அன்பின் பாதம் நிதமே நிதமே
3
தேடித் திரி கணமே
திருமகன் சேசுவின் துணை நிதமே நிதமே