1. பொய்யான வாழ்வை சதமென எண்ணி மகிழாதே
2. எந்நாளும் பிறரை மோசம் செய்திட நினையாதே
மோசம் வந்து சேரும் என்பதை நீயும் மறவாதே
3. எந்நாளும் தீய காரியம் செய்திட நினையாதே
தீமை வந்து சேரும் என்பதை என்றும் மறவாதே
4. எந்நாளும் நெஞ்சம் தனிலே வஞ்சனை நினையாதே
தன்னாலே அழிந்து போவாய் என்பதை மறவாதே
5. எந்நாளும் சேசு நாமம் பாட மறவாதே
தன்னாலே மோட்சம் உண்டு என்பதை மறவாதே