பஜனை கோஷ்டி பிள்ளைகளே நீங்க
புனித அந்தோணியாரை துதிப்போம் வாங்க
அன்பிருக்கும் நெஞ்சமே
காடு வயல்கள் எல்லாம் மழைநீர் இல்லாமல்
காய்ந்து காய்ந்து இங்கு கிடக்குதையா
குடிமக்கள் நாங்கள் குடிநீர் இல்லாமல்
குமுரி குமுரி இங்கு வாடுதையா
விவசாயிகள் எல்லாம் விவசாயம் இல்லாமல்
விலைவாசி ஏற்றம் கண்டு விழிக்குதையா
வான்மேகம் போல நீயும் வர வேண்டும்
வான் இருந்து மழை நீரை தர வேண்டும்
உந்தன் கையில் உள்ள யேசுவை பரிந்துரை செய்து
எங்கள் குறையை தீர்ப்பாயே