எங்கே சுமந்து
போகிறீர்
எங்கே சுமந்து
போகிறீர்
தங்கும் ஸ்தலம்
தோனாமல்
பொங்கு பகைவராலே
அங்கம் நடுநடுங்க
( எங்கே )
தொண்டர் தொழும்
எம்
தேவா கண்டவர்
தான் நகைக்க
கொண்டை சிறைபிடித்து
சண்டாளர் தானிழுக்க
பாவத்தினால் வந்த
சாபத் தீர்வையோ
இது
கள்ளர் நடுவிலே
நீர்
எண்ணும் மணலும்
சூழ
முள்ளின் முடி
தரித்து
தள்ளாடித்தா விழுந்து
( எங்கே )
ஓயா வேதனை சேர
மாயாவே தியானம்
சூழ ஆயாசமுற்றவர்
தாயார் அழுது வர
( எங்கே )