உத்தரிக்கிற ஆத்துமங்களின் புகழ்மாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய ஆவியாகிய சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா
-எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

புனித மரியாயே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
இறைவனுடைய புனித மரியே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
கன்னியர்களில் உத்தம கன்னிகையே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித மிக்கேலே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
தூதரும் அதிதூதருமாகிய சகல சம்மனசுக்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
நவவிலாச சபையாயிருக்கிற சகல சம்மனசுகளே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
புனித ஸ்நாபக அருளப்பரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித சூசையப்பரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும் 
பிதாப்பிதாக்களும் தீர்க்கத்தரிசிகளுமாகிய புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
புனித இராயப்பரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித சின்னப்பரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித அருளப்பரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
அப்போஸ்தலரும் சுவிஷேகருமாகிய சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
புனித முடியப்பரே...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித லவுரேஞ்சியாரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
வேதசாட்சிகளான சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
புனித கிரெகோரியாரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித அமிர்தநாதரே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித அகுஸ்தீனுவே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித இரோணிமுவே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
மேற்றிராணிமார்களும் ஸ்துதியர்களுமாகிய சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
வேத வித்தியாபாரகரான சகல புனிதர்களே...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
குருக்களும் ஆசிரியர்களுமாகிய சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
சந்நியாசிகளும் தபோதனர்களுமாகிய சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
புனித மரியா மகதலேனாளே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித கத்திரனாளே ...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித பார்பரம்மாளே...
மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்
கன்னியாஸ்திரிகளும் விதவைகளுமாகிய சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
ஆண்டவருடைய திருவடிகளான ஸ்திரீ பூமான்களாகிய சகல புனிதர்களே ...
 மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் 
தயாபராயிருந்து    ...  அவர்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி .
தயாபராயிருந்து    ... எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி
சகல பொல்லாப்புகளிலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
உமது கோபத்திலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
உமது நீதி அகோரத்திலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
பசாசின் வல்லமையிலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
கொடூர வியாகுலத்திலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
கொடிய ஆக்கினையிலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
மரணத்தின் பயங்கரமான இருளிலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
அக்கினிச் சுவாலையிலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
துயரமான அழுகையிலே நின்று ...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
உத்தரிக்கிற ஸ்தலத்து சிறைச் சாலையிலே நின்று...
அவர்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய திரு மனுத  அவதாரத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய மாசில்லாத உற்பவத்தையும் பிறப்பையும் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய மதுரமான நாமத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய பாலத்துவத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய ஞானஸ்நானத்தையும் உபவாசத்தையும் பார்த்து...
 அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய மிகுந்த தாழ்ச்சியைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய சுறுசுறுப்பான கீழ்ப்படிதலைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய கிருபையின் மிகுதியையும் அளவில்லாத சிநேகத்தையும் பார்த்து...
 அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய கொடூர உபத்திரவங்களையும் நிர்ப்பந்தங்களையும் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய இரத்த வியர்வையைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீர் கட்டுண்ட கட்டுக்களைப் பார்த்து...
 அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீர் பட்ட அடிகளைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய திரு முள்முடியைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய திருச்சிலுவையைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய கொடூரமான மரணத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய ஐந்து திருக்காயங்களைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
எங்கள் மரணத்தை ஜெயித்தெழுந்த  தேவரீருடைய அவமானமுள்ள மரணத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய விலைமதியாத திரு இரத்தத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய மகிமையான உத்தானத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேவரீருடைய அதிசயமான ஆரோகணத்தைப்  பார்த்து...
 அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
தேற்றரவு பண்ணுகிரவராகிய தூய ஆவியின்  ஆகமனத்தைப் பார்த்து ...
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
நடுத்தீர்க்கிற நாளிலே... 
அவர்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி .
பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
பாவியாயிருந்த மரிய மகதலேனம்மாளுக்கு பாவ மன்னிப்பு தந்தவரும் நல்ல கள்வனின்  மன்றாட்டைக் கேட்டவருமாகிய தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
மரணத்தின் திறவுகோலையும் நரகத்தின் திறவுகோலையும் கொண்டிருக்கிற தேவரீரை மன்றாடுகிறோம்...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
இரட்சண்ணியத்துக்கு உரியவர்களை இலவசமாய் இரட்சிக்கிற தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
எங்கள் சகோதரர் ,உறவினர்,நண்பர்களுடைய  ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலே நின்று இரட்சித்தருள தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
பூலோகத்திலே யாரும் நினையாத சகல ஆத்துமங்களுக்கும் தயை செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
கிறீஸ்து நாதரிடத்தில் இளைப்பாறுகிற சகலருக்கும் குளிர்ச்சியும் பிரகாசமும் சமாதானமும் உள்ள இடத்தைக் கட்டளையிட்டருள்ள  தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
பாவ தோஷத்தால் அவர்களுக்கு உண்டாகிற ஆக்கினையைக் குறைக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
அவர்கள் துயரத்தை  சந்தோசமாக மாற்றியருள தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
அவர்களுடைய ஆசை நிறைவேற தயைபுரிய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
அவர்கள் உம்மைப் புகழ்ந்து ஸ்துதி பலியை உமக்குச் செலுத்தும்படி செய்தருள தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
உம்முடைய புனிதர்களின் கூட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
இறைவனின் மகனே , தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
கிருபையின் ஊரணியே தேவரீரை மன்றாடுகிறோம் ...
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி .
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனுடைய செம்மறியாகிய இயேசுவே ,
அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனுடைய செம்மறியாகிய இயேசுவே ,
அவர்களுக்கு இளைப்பாற்றியைத் தந்தருளும்
உலகத்தின் பாவங்களைப் போக்கும் இறைவனுடைய செம்மறியாகிய இயேசுவே ,
அவர்களுக்கு நித்திய இளைப்பாற்றியைத் தந்தருளும்
நரக வாசலில் நின்று ,
 அவர்களுடைய ஆத்துமங்களை மீட்டு இரட்சித்தருளும் 
சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக !
 அப்படியே ஆகக்கடவது 
முதல்   : சுவாமி எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
துணை  : எங்கள் அபய சத்தம் தேவரீருடைய சந்நிதி மட்டும் வரக்கடவது 

செபிப்போமாக :

             
சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் , இரட்சகருமாகிய சர்வேசுரா , மரித்த உமது அடியார்களுக்காகச் செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து , அவர்கள் மிகுந்த ஆவலோடு  கேட்கிற  பாவமன்னிப்பைக் கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம் . சதாகாலமும் சீவியரான இறைவா ! , இந்த மன்றாட்டைத்  தயவாய்க் கேட்டருளும் சுவாமி .

           
நித்திய பிதாவே ! பெற்றோர் , உற்றார் , நண்பர்  , உபகாரிகள் முதலியவர்களைத் தக்கவிதமாய் நேசித்து , அவர்களுக்கு வேண்டிய நன்மை செய்யக்  கற்பித்தருளினீரே! ஆகையால் எங்களைப் பெற்று , அன்போடு வளர்த்து ஆதரித்தவர்களும் , பற்பல உபகாரங்கள் எங்களுக்குச் செய்தவர்களும் , எங்கள் உறவினர்  , நண்பர்  , முதலானவர்களும் வேதனை நீங்கி நித்திய காலம் உம்மைச் சந்தோசமாய் தரிசித்துக் கொண்டிருக்க தேவரீர் கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம் .

முதல்   : மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளுவோமாக துணை  : நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளும் சுவாமி ,
முடிவில்லாத பிரகாசமும் அவர்களுக்குப் பிரகாசிக்கக் கடவது .

(
கிருபை தயாபத்து மந்திரம் சொல்லவும் )